CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Tuesday, March 23, 2010

உன்னத கலைஞ்சன் !!!! மைகேல் ஜாக்சன் RIP




இருக்கும்போது
தூற்றிப் பேசி
புரளி பேசுவர்
போனபின்பு
போற்றிப் பாடி
புண்ணியம் தேடுவர்
கறைகள் இல்லாத
கல்லறைகள் உண்டா ?!
உயிருள்ள போதே
கொன்று விட்டு
விழி மூடிய பின்பு
விளக்கேற்றினால்
புண்ணியமுண்டோ?!
ஐம்பது வயதிலும்
ஆயிரம் கூறுகளாய்
ஆக்கினீர்கள் - அவன்
உணர்வை
இன்று
மரணத்துக்கு
காரணம் தேடி - எத்தனை
கூறுகளாக்குவீர்கள் -அவன்
உடலை?!
இனிமேலாவது
சாதனைகளை
பெரிதுபடுத்துங்கள்
கலைஞர்களது
சோதனைகளை அல்ல...
கலைஞ்சனை  கலைஞ்சனாய்  
மட்டும் பாருங்கள். 


from the books of my dear xavier

Thursday, March 18, 2010

சிரமங்களின் வலியால் மட்டுமே சிகரங்களின் வழி தெரியும்.




முதலை மீது ஏறி்
சவாரி செய்பவன்
முள் குத்தியதற்கு
வருந்துவானா?

கடலை அளக்க
கால்களை விரித்தவனை
அலைகளின் முத்தங்கள்
என்ன செய்து விடும்?

சிங்கத்தின் குகைக்குள்
சிலிர்ந்து நிற்பவன்
சிலந்தியைக் கண்டு
அச்சம் கொள்வானா?

சிரமங்களின் வலியால் மட்டுமே
சிகரங்களின் வழி தெரியும்.
உள்ளத்தின் காயங்களே
வெற்றியின் உயரத்தைக் காட்டும்

கருவறையும் இருட்டறை
கல்லறையும் இருட்டறை
இடைப்பட்ட காலத்தில் மட்டும்
இருட்டறை கண்டு பயம் ஏனோ?

காலத்தின் கரங்களில்
நீ சிக்கினால்
வெற்றியின் தூரம்
வெகுதூரம்.

காலம்
உனது கரங்களுக்குள் சிக்கினால்
தோல்வியின் தூரம் தொலைதூரம்.

கலங்காதே கண்மணியே...
நம்பிக்கை கால்களின் கீழே
கவலைகள் என்றும் கால் தூசி.
மனதில் நம்பிக்கை உறுதிகொண்டால்
மரணம்கூட மண்டியிட்டு நிற்கும். 


Sunday, March 7, 2010

தாய் மண்ணே வணக்கம்!!!






அதுவரை நான்
வாடகைத்திருந்த காற்றோடு
வாசனை இருந்தது, ஆனால்
ஒருவித வெறும் கலந்து...
சுத்தம் இருந்தது, ஆனால்
ஒருவித சோகம் சூழ்ந்து..
குளுமை இருந்தது, ஆனால்
ஒரு மாயச்சாயம் பூசி...

அன்று நான் சுவாசித்த காற்றோடு
இரைச்சல் இருந்தது, அதில்
உரிமை உணர்வு அதிகமாகவே இருந்தது
அன்பெனும் அழகுடன்.



அந்தக் காற்று
என் நாசியூடே உயிர் நரம்பை
தொட்டபோது...
இது உன் காற்று
சுதந்திரமாக சுவாசி - என்றது
ஏதோ ஓர் அசரீரி

இந்திய காற்றில்
அப்படியொரு ஆனந்தம்
ஆரோக்கியம்
அனுபவம்...

அத்தனை நாள் அந்தக் காற்றின்
அருமை தெரியவில்லை
உணரவுமில்லை

அன்று உணர்ந்தேன்,
முதல் முறை வெளிநாடு சென்று
என் கால்கள் சொந்த மண்ணில்
ஸ்பரிசித்த போது!

தாய் மண்ணே வணக்கம்!
*

Saturday, March 6, 2010

Dont Hurt Yourself!!





Do Not Hurt Yourself 

One night a snake while it was looking for food, entered a carpenter’s workshop.

The carpenter, who was a rather untidy man, had left several of his tools lying on the floor. One of them was a saw. As the snake went round and round the shop, he climbed over the saw, which gave him a little cut.

At once, thinking that the saw was attacking him, he turned around and bit it so hard that his mouth started to bleed. This made him very angry. He attacked again and again until the saw was covered with blood and seemed to be dead.

Dying from his own wounds, the snake decided to give one last hard bite then turned away. The next morning the carpenter was surprised to find a dead snake on his doorstep.


Lesson to Learn:
Sometimes in trying to hurt others, we only hurt ourselves..