அதுவரை நான்
வாடகைத்திருந்த காற்றோடு
வாசனை இருந்தது, ஆனால்
ஒருவித வெறும் கலந்து...
சுத்தம் இருந்தது, ஆனால்
ஒருவித சோகம் சூழ்ந்து..
குளுமை இருந்தது, ஆனால்
ஒரு மாயச்சாயம் பூசி...
அன்று நான் சுவாசித்த காற்றோடு
இரைச்சல் இருந்தது, அதில்
உரிமை உணர்வு அதிகமாகவே இருந்தது
அன்பெனும் அழகுடன்.
அந்தக் காற்று
என் நாசியூடே உயிர் நரம்பை
தொட்டபோது...
இது உன் காற்று
சுதந்திரமாக சுவாசி - என்றது
ஏதோ ஓர் அசரீரி
இந்திய காற்றில்
அப்படியொரு ஆனந்தம்
ஆரோக்கியம்
அனுபவம்...
அத்தனை நாள் அந்தக் காற்றின்
அருமை தெரியவில்லை
உணரவுமில்லை
அன்று உணர்ந்தேன்,
முதல் முறை வெளிநாடு சென்று
என் கால்கள் சொந்த மண்ணில்
ஸ்பரிசித்த போது!
தாய் மண்ணே வணக்கம்!
*
0 comments:
Post a Comment